டெல்லியில் மீண்டும் ஒலிக்கும் விவசாயிகள் போராட்டம்... கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்!

Farmers Protest Delhi
Farmers Protest Delhi

த்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். விவாசயிகளின் தொடர் போராட்டத்தை அடுத்து மத்திய அரசு சற்று இறங்கி வந்தது. வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால், வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் டெல்லி நோக்கி பேரணி செல்ல அழைப்பு விடுத்தன.

இதனிடையே, இன்று தங்களின் டெல்லி சலோ பேரணியைத் தொடர பஞ்சாப் ஹரியாணா எல்லையான ஷம்புவில் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் அணிவகுத்து நின்றனர். விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் தடுக்க ஹரியாணா போலீஸார் புதன்கிழமை மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த முறையும் நீண்ட பயணத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், டெல்லி செல்லும் அளவுக்கு டீசலும், ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுபொருள்களும் கையிருப்பில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், ஹரியானா - டெல்லி எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கூட்டத்தை கலைக்க ட்ரோன்களை பயன்படுத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com