யமுனையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: தத்தளிக்கும் தலைநகர் டெல்லி!

டெல்லி வெள்ளம்
டெல்லி வெள்ளம்
Updated on

டெல்லி கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது இதன்காரணமாக தலைநகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறு காணாத அளவுக்கு ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக யமுனை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வெளியேற்றிவருகிறார்கள். யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதையடுத்து நகரின் முக்கிய சாலையான தமனி பகுதியில் போக்குவரத்தை மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி மட்டுமல்லாது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இமாச்சல பிரதேசம் உட்பட பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழை காரணமாக யமுனையின் நீர்மட்டம் கடந்த ஜூன் 12ம் தேதி 207.49 மீட்டரிலிருந்து 13ம் தேதி 208.46 மீட்டராக உயர்ந்துள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள 17 பள்ளிகளை அதிகாரிகள் மூடியுள்ளனர் மற்றும் தண்ணீர் தேங்கிய தெருக்களில் இருந்து போக்குவரத்தை திருப்பிவிடப்பட்டுள்ளது.

மழை காரணமாக டெல்லி அரசாங்கத்தால் 16,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் மேம்பாலங்களின் கீழ் அமைக்கப்பட்ட நிவாரண கூடாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் தெரிவித்துள்ளனர். வெள்ள பாதிப்பு நிலைமைகளை குறித்து விவாதிக்க மாநில ஆளுநர் வினை குமார் சக்சேனா டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து வெள்ளை பாதிப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திஉள்ளார்.

சமீப ஆண்டுகளாக இந்தியா கடுமையான இயற்கை சீற்றங்களை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது. பருவநிலை மாற்றமே இயற்கை சீற்றங்கள் அதிகரிக்க காரணம் என வல்லுநர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com