மேயர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் அஷ்ஷூ தாக்கூர் ஆகியோரும், பாஜக சார்பில் ரேகா குப்தாவும் போட்டியிட உள்ளனர். 250 மாமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜலஜ் குமார் மற்றும் ஆலே முகமது இக்பால் ஆகியோரும் பாஜக சார்பில் கமல் பக்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வாக்கெடுப்பில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு லெப்டினண்ட் கவர்னர் வினய் குமார் சக்ஷேனா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், லெப்டினண்ட் கவர்னர் சக்ஷேனாவுக்கும் பனிப்போர் தொடந்து வருகிறது.
டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 4 ம் தேதி வெளியானது. மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களையும், பாஜக 104 இடங்களையும் காங்கிரசு கட்சி 9 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.
இந்த மேயர் பதவியேற்பு விழாவை காங்கிரசு கட்சி புறக்கணிப்பதாக அணில் சௌத்ரி தெரிவித்துள்ளார். காங்கிரசு வேட்பாளர்களுக்கு வாக்களித்த டெல்லி மக்கள் அவர்களுக்கு பணி செய்யவே வாக்களித்துள்ளனர் மாறாக ஆம் ஆத்மி கட்சி, பாஜக வின் திட்டங்களுக்காக அல்ல என்று காங்கிரசு கட்சியின் டெல்லி மாநில தலைவர் அணில் சௌத்ரி கூறியுள்ளது பரபரப்பி கிளறி வருகிறது.
மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், லெப்டினண்ட் கவர்னருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிகழ்ந்து வரும் நிலையில் டெல்லி மேயர் தேர்தல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.