டெல்லியில் ரத்த பைகள் ட்ரோன்கள் மூலம் விநியோகம்!

டெல்லியில் ரத்த பைகள்  ட்ரோன்கள் மூலம் விநியோகம்!

டெல்லியில் ரத்த பைகளை ட்ரோன்கள் மூலம் விநியோகம் செய்வதற்கான சோதனை முயற்சி நடைபெற்று அதில் வெற்றி பெற்றுள்ளது.

ட்ரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்த முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ட்ரோன்கள் மூலம் மருந்துகள் மற்றும் ரத்தப் பைகள் கொண்டு செல்லப்படுவதால் ஏதேனும் சேதம் ஏற்படுமா, வெப்பநிலைக்கு ஏற்ப அவற்றின் தன்மை மாறுமா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. தொடக்க சோதனையின் போது, ஜி ஐ எம் எஸ் மற்றும் எல் ஹெச் எம் சி-யிலிருந்து 10 யூனிட் ரத்தம் எடுத்துச் செல்லப்பட்டது.

கொரோனா தொற்று வேகமெடுத்தபோது வளர்ச்சி பெறாத ஊர்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ சிஎம்ஆர்) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ’ஐ-ட்ரோன்கள்’ முதன் முதலாக பயன்படுத்தப்பட்டன. இந்த முயற்சி வெற்றியை கொடுத்த நிலையில், அதனை விரிவு படுத்தும் நோக்கில், டெல்லியில் இன்று ‘ஐ-ட்ரோன்கள்’ மூலம் ரத்தப் பைகளை விநியோகம் செய்வதற்கான சோதனை ஓட்டம் நடத்தப் பட்டது.

இதில் ரத்த பைகளுக்கு எந்த சேதமும் ஏற்படாததால் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரத்த பைகளை விநியோகிப்பதற்கும், மற்ற மருத்துவ பணிகளுக்காகவும் ஐ-ட்ரோன்கள் பயன்படுத்தப் படும் என்று ஐ சி எம் ஆர் இயக்குநர் ஜெனரல் ராஜீவ்பால் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com