சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றப்போவதாக கூறிய கிறிஸ்தவ அமைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றப்போவதாக கூறிய கிறிஸ்தவ அமைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
Aanmeegam

ரோடு மாவட்டம், சென்னிமலை கைத்தறி நெசவுத் தொழிலுக்கு புகழ் பெற்றது. இந்த ஊரில்தான் சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் பிறந்தார். இவை அனைத்தையும் விட சென்னிமலை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சோழ மன்னர்களால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையும் பெருமையும் வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி முருகன் திருக்கோயில்தான். கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமை மிக்கது இந்தத் திருத்தலம்.

இக்கோயில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், தயிர் போன்றவை எவ்வளவு நேரமானாலும் புளிப்பதில்லை, இக்கோயில் அமைந்த மலை மீது காகங்கள் பறப்பதில்லை போன்ற பல்வேறு அற்புத அதிசயங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது இந்த முருகன் திருத்தலம். அதுமட்டுமின்றி, பக்தர்கள் தங்கள் வீட்டு சுப காரியங்களுக்காக மூலவர் முருகப்பெருமானிடம் சிரசுப்பூ வாக்கு கேட்டு அதன்படி செயல்படுவது இக்கோயிலில் வழக்கத்தில் உள்ளது.

சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல கோயில்களுக்குச் சென்று வந்தபோது இம்மலையினைக் கண்டு தனது பரிவாரங்களுடன் மலைக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தபோது, முருகனே அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்துக்கொண்டு சிவாலய சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கி அருள் புரிந்ததாக வரலாறு. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் சென்னிமலை முருகனை போற்றி ஐந்து பாடல்கள் பாடி முருகப் பெருமானால் படிக்காசு பெற்ற பெருமைமிக்கது இந்தத் திருத்தலம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தெற்கே அமைந்துள்ளது. மேலும், சென்னிமலை நகரினைச் சுற்றி 24 புண்ணிய தீர்த்தங்கள் அமைந்துள்ளது சிறப்பு.

ந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னிமலை பேருந்து நிலையத்தின் அருகில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சென்னிமலையை கல்வாரி மலையாக, கிறிஸ்தவ மலையாக மாற்றுவோம் என்று பேசினார்கள். இந்தப் பேச்சுக்கு அப்போதே கண்டனம் தெரிவித்து சென்னிமலை முருகன் பக்தர்களும் இளைஞர்கள் சிலரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கிறிஸ்தவ அமைப்பினரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை சென்னிமலை பேருந்து நிலையத்தின் முன்பு, இந்து அமைப்பினர் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில், “தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் கல்வாரி மலையாகவும், ஏசு மலையாக மாற்றப்போவதாக பொய்யான பிரச்சாரங்களை மக்களிடையே செய்து வருகிறார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதுமட்டுமின்றி இங்குள்ள கிறித்துவ அமைப்புகள் அப்பாவி கிராம இந்து மக்களை பெரிய அளவில் மத மாற்றம் செய்கின்றனர். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவர்களையே போலீசார் கைது செய்கின்றனர். இதைப் பற்றி தமிழக அரசும் கண்டுகொள்வதில்லை. சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்தவ மலையாக மாற்றுவோம் என்று பேசிய கிறிஸ்தவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சட்டரீதியாக அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், ‘புஷ்பகிரி மலையை கல்வாரி மலையாக மாற்றவிட மாட்டோம்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com