ஆடி பௌர்ணமி.. சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

சதுரகிரி
சதுரகிரிIntel
Published on

ன்று ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சதுரகியில் மலைகோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதம் தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களையொட்டி 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் இன்று ஆடி பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்தனர்.ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட நான்கு நாட்களில் பிரதோஷ தினமான முதல் நாள் மலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பக்தர்கள் யாரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் பக்தர்கள் அன்றைய தினத்தில் கொண்டு செல்ல வேண்டிய அபிஷேக பொருட்கள் அனைத்தையும் பௌர்ணமி தினமான இன்று நடைபெறும் அபிஷேகத்திற்கு கொண்டு சென்றனர்.

மாதம் 4 நாட்கள் அனுமதிக்கப்படும் நிலையில் காட்டுத் தீ காரணமாக கடைசி நாளான இன்று மட்டும் தான் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினர் காட்டுக்கு தீ வைத்ததாக ஒருவரை கைதும் செய்துள்ளனர்.

கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் சாமி தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் யாரும் கோவில் வளாகத்திலையோ மலைப்பகுதியிலேயே தங்க அனுமதி கிடையாது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாளர்கள் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க கூடாது என்றும், குறிப்பாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் இன்று இறுதி நாள் என்பதால் வழக்கத்தை விட சற்று கூட்டம் இன்று அதிகமாகவே இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com