தமிழகம் முழுவதும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை முகாம்

தமிழகம் முழுவதும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை முகாம்

Published on

தமிழகம் முழுதும் இன்று 2.60 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது. இப்பணியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மாநிலத்தில் 2.60 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு இந்த முகாமை தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு வருடமும் தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த இரண்டு நாட்களில் அல்லது அந்த வாரங்களில் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். இந்த ஆண்டு தகுதியான அளவிற்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

“குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதால், ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும்” என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,

இதற்காக அங்கன்வடிமையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் இன்று சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com