"தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தம்" திருச்சி விழாவில் ஓபிஎஸ்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

"அதிமுகவின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா " "நாம் நடத்துவது தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தம்" என திருச்சி பொன்மலையில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசியுள்ளார் ஓபிஎஸ்.

திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா மற்றும் புரட்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரட்டை இலை சின்னத்தை காட்டியபடி நிகழ்ச்சி மேடைக்கு நடந்து வந்த ஓபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படத்திற்கு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த மாநாட்டில் பின்வரும் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.போலி பொதுக்குழு மூலம் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை என எடுக்கப்பட்ட முடிவை நிராகரிக்கிறோம்,

2.இபிஎஸ் இடம் உள்ள பொதுக்குழு கலைக்கப்பட வேண்டும்,

3.நேர்மையான பொதுக் குழுவை உருவாக்க வேண்டும்,

4.ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர்,

5.பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட இபிஎஸ், மற்ற பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள இன்னும் சிலர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Eps  Ops
Eps Ops

பின்னர் நிகழ்ச்சியில் ஒபிஸ் பேசியபோது அதிமுகவின் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று உண்மையான பொதுக்குழு முடிவு செய்தது. ஆனால் நம்பிக்கை துரோகிகள் இதனை மாற்ற முயற்சிக்கின்றனர். தொண்டனை தலைமைப் பதவிக்கு கொண்டு வரும் தலையாய கடமை எங்களுக்கு உள்ளது. 2 கோடியாக இருந்த கட்சியின் நிதி, இன்று 250 கோடியாக மாறியது. கட்சியின் நிதியை முறையாக செலவு செய்யாதவர்கள் மீது தண்டனை பெற்றுத் தரப்படும் என தெரிவித்தார்.

மேலும் "நாம் நடத்துவது தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தம். உங்களின் வலிமையோடு, திருச்சி மாநகரில் விதையை உருவாக்கி உள்ளோம். இது பூ பூத்து, காய் காய்த்து, மீண்டும் தொண்டர்களிடமே கொடுக்க வேண்டும். வருகின்ற காலம், தொண்டர்களின் காலமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com