
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, கிரிக்கெட் ஆடுகளத்திலும் சரி, வெளியிலும் சரி அமைதியானவர்.
கிரிக்கெட் உலகின் ரசிகர்கள் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்தி வரும் நிலையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சமீபத்தில் மனைவி சாக்ஷியுடன் உத்தரகண்ட் மாநிலத்தில், அல்மோராவில் உள்ள பூர்விக கிராமமான லாவ்லிக்கு சென்று நேரத்தை செலவிட்டார்.
இது தொடர்பான விடியோ ஒன்று வைரலாகி உள்ளது. பூர்வீக கிராமத்துக்குச் சென்ற அவர், அங்குள்ள குறுகலான சாலைகளை பார்த்து குழப்பமடைந்து பொதுமக்களிடம் வழி கேட்டறிந்தார். “தேநீர் சாப்பிடலாம் வாங்க” என்று மக்களை அழைத்து பேசினார். சிலரின் பிரச்னைகளுக்கும் அவர் தீர்வு சொன்னார். தேநீர் பிரியர்களால் தோனியின் பேச்சை கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை.
தோனியின் மனைவி சாக்ஷியும் அழகிய தருணங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார். லவாலி கிராமத்தின் சுற்றுப்புற அழகின் பின்னணியில் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உள்ளூர் மக்களுடன் மனம் திறந்து பேசி அவர்களின் மனதைக் கவர்ந்தனர் தோனி தம்பதியர். கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களின் கால்கைளைத் தொட்டு தோனி, அவரது மனைவி சாக்ஷி இருவரும் ஆசிர்வாதம் பெற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.