தோனியின் கேண்டி கிரஷ் வீடியோ... 3 மணி நேரத்தில் 3 பில்லியன் யூசர்ஸ்!

தோனியின் கேண்டி கிரஷ் வீடியோ... 3 மணி நேரத்தில் 3 பில்லியன் யூசர்ஸ்!
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியால் கேண்டி கிரஷ் கேம் செயலியை 3 மணி நேரத்தில் 3 பில்லியன் யூசர்ஸ் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், தற்போது உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தோனி விமானத்தில் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது தோனியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள். அவரை வரவேற்கும் விதமாக நிறைய சாக்லேட்டுகளை பரிசாக கொடுத்தனர். தொடர்ந்து அவரது இருக்கையில் அமர்ந்த தோனி மீது அனைவரின் கண்களும் திரும்பியது.

அப்போது தோனி தன்னுடைய ஐபேடில் கேண்டி க்ரஷ் வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த விமான பணிப்பெண் ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்து, தல தோனி இந்த கேம் தான் வீளையாடி கொண்டிருக்கிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ தீயாக பரவ, வெறும் 3 மணி நேரத்திலேயே 36 லட்சம் பேர் கேண்டி க்ரஷ் வீடியோ கேமை பதிவிறக்கம் செய்துள்ளார்கள். இது குறித்து கேண்டி கிரஷ் நிறுவனம் தோனிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளது. ஒரு காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது ஃபேவரட்டாக இருந்த கேண்டி க்ரஷ் கேம், தற்போது தோனி வெளியிட்டுள்ள வீடியோவால் மீண்டும் யூசர்ஸ் அதிகமாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com