விதிமுறைக்குட்பட்டே குழந்தை பெற்றாரா நயன்தாரா? வெடிக்கிறது சர்ச்சை !

நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் 9ம் தேதி மிகப் பிரமாண்டமாகத் திருமணம் நடைப்பெற்றது. அவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

விக்னேஷ் சிவனே தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர் என்று நேற்று முன் தினம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் நயன்தாராவும் நானும் "அம்மா அப்பா" ஆகிவிட்டோம் என மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டிருந்தார். பலரும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இரட்டைக் குழந்தைகள்
இரட்டைக் குழந்தைகள்

இதனிடையே கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார்களா? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், "நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்று விளக்கம் கேட்கப்படும்.

திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும். சுகாதாரத்துறையின் மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com