இலவச வீடு கட்ட காசு கொடுத்தது விஜயா? அல்லது விஜய் ரசிகர் மன்றமா? வெடிக்கும் சர்ச்சை!

Vijay with Bussy
Vijay with Bussy
Updated on

தவெக கட்சியின் விஜய் விலையில்லா வீடுகள் வழங்கும் திட்டம் தற்போது செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் சர்ச்சை கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நச் பதிலடி கொடுத்திருக்கிறார்.

விஜய் கட்சி ஆரம்பித்ததும், மாணவர்களை சந்தித்து இரண்டாவது முறையாக பரிசு பொருட்களை வழங்கினார். அதோடு, கட்சி சார்பாக சில நலத்திட்டங்களையும் அறிவித்தார். அந்த வகையில் நேற்று, விஜய் விலையில்லா வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் வழங்கப்பட்டன.

சென்னையை அடுத்த பொன்னேரியில் பழங்குடியினர் இரண்டு பேருக்கு, விஜய் ரசிகர் மன்றம் சார்பில் வீட்டு கட்டித் தரப்பட்டது. அதனை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ரிப்பன் கட் செய்து திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஒரு செய்தியாளர், “ரசிகர்கள் பணம் திரட்டி கட்டித்தந்த வீட்டிற்கு விஜய் இலவச வீடு என்று பெயர் சூட்டியது ஏன்? விஜய் ரசிகர் மன்ற இலவச வீடு என்று பெயர் வைக்கலாமே?" என்று வினவினார்.

இதையும் படியுங்கள்:
கேரளாவில் 26 ஆயிரம் வீடுகளில் நிபா வைரஸ் பரிசோதனை!
Vijay with Bussy

அதற்கு புஸ்ஸி, “வீடுகளை நாங்க கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னோம். அதை விஜய் கொடுத்தாரா இல்லை ரசிகர்கள் கொடுத்தாங்களான்னு நாங்கள் சொல்லவே இல்லை. தளபதி விலையில்லா வீடு திட்டத்தில் இதை கட்டி கொடுத்திருக்கிறோம் என்று நாங்கள் சொல்கிறோம் அவ்வளவுதான். மேலும் இந்தத் திட்டத்திற்கு தளபதி பணம் கொடுத்தாரா இல்லையா என்று உங்களுக்கு தெரியுமா? சொல்லுங்க தெரியுமா?” என்று கோபமாக பதிலளித்தார்.

கடந்த உலக பட்டினி தினத்தன்று, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது. அதேபோல், கடந்த ஆண்டு ‘தளபதி விஜய் பயிலகம்’ என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டது. அப்போது ஒரு மாணவன் எதுவும் எழுதாத நோட்டை வைத்திருந்தான். அது ஒரு ட்ரோல் மெட்டிரியலாக மாறியது. இந்த சூழ்நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com