உங்களுக்கு இந்த அலர்ட் மெசேஜ் வந்துடுச்சா? எச்சரிக்கும் மத்திய அரசு.

உங்களுக்கு இந்த அலர்ட் மெசேஜ் வந்துடுச்சா? எச்சரிக்கும் மத்திய அரசு.
Published on

நாடு முழுவதும் அதிகப்படியான நபர்கள் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு நேற்று இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையிலிருந்து திடீரென, ஓரே மாதிரியான சோதனைச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தியால் பலரும் வியப்படைந்துள்ளனர். 

மத்திய அரசின் கீழ் இயங்கும் தொலைதொடர்புத் துறையால் அந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவசர காலங்களில் மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகவே இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருப்பதாக வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளனர். 

அந்த மெசேஜில் இடம்பெற்றிருந்த தகவல், "இது மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையின் அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட சோதனை செய்தியாகும். இதற்கு உங்கள் பக்கம் இருந்து எவ்விதமான எதிர்வினையும் தெரிவிக்க தேவையில்லை என்பதால் இந்த செய்தியை புறக்கணித்துவிடுங்கள். பரிசோதனைக்காகவே இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படும் பேன் இந்தியா எமர்ஜென்சி அலர்ட் சிஸ்டம் இதுவாகும். இது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலத்தில் சரியான விழிப்புணர்வு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது", என அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மெசேஜ் சரியாக நேற்று பிற்பகல் 1:30 மணி அளவில் பல செல்போன் பயனர்களுக்கு ஃப்ளாஷ் செய்தியாக வந்துள்ளது. மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் ஒளிபரப்பு அமைப்புகளின் அவசரகால எச்சரிக்கை ஒளிபரப்பு எப்படி செயல்படுகிறது என்பதை, அவ்வப்போது இப்படி சோதனை செய்து பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கடந்த ஜூலை 20ஆம் தேதி இந்தியாவில் உள்ள பல செல்போன் பயனர்கள் இத்தகைய எச்சரிக்கை பரிசோதனை மெசேஜைப் பெற்றுள்ளனர். 

செல்போன் மூலமாக ஒளிபரப்பு எச்சரிக்கை என்பது ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏதாவது புவியியல் பாதிப்பு ஏற்பட்டால், அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் சரியான நேரத்தில் பேரிடர் மேலாண்மைக்கான முக்கிய செய்திகள் உடனடியாக அனுப்பப்படும் என தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தால் சுனாமி, திடீர் வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர் சமயங்களில் மக்கள் தயாராக இருக்கவே, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com