சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்திருப்பதாக மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்புகளால் சாத்தியமாகியிருக்கிறது.
தள்ளுவண்டியில் நம்மைத் தேடி வரும் காய்கறிகள், பழங்கள், வீட்டிற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்திலும் ஜிபே, பேடிஎம் வசதியை பார்க்க முடிகிறது. இளநீர் விற்கும் சாலையோரக் கடைகள் தொடங்கி, பானி பூரி விற்கும் கடைகள் வரை ஜிபே பிரபலமாகிவிட்டது.
சாலையோர கடைகளின் வியாபாரத்தை ஊக்குவிப்பதற்கு தற்போது வங்கிக்கடன்களும் தரப்படுகின்றன. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 4 ஆயிரத்து 606 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய ஊக்கம் தரப்படுகிறது. இதுவரை 37 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் சாலையோர வியாபரிகளால் மேற்கொள்ளப்பட்டிருபபதாக தெரிவித்தார். இதன் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சாலையோர வியாபரிகள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகம், விலை குறைவு என்பதாலும் எளிதாக கிடைக்கிறது என்பதாலும் எந்தவொரு பொருளுக்கும் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு உண்டு. ஆனால், கடைகளை விரிவுபடுத்துவதோ, அன்றாட பண பரிவர்த்தனைகளை எதிர்கொள்வதோ சவலாக இருந்து வருகிறது.
வங்கிகளில் கடன் பெறுவதற்கு தடையாக இருப்பது, அரசு அங்கீகாரம்தான். அங்கீகாரம் பெறுவதற்கு பணப்பரிவர்த்தனைகள் வெளிப்படையாக இருந்தாக வேண்டும். அதற்கு டிஜிட்டல் வழிய பணப்பரிவர்த்தனைகள் கைகொடுக்கின்றன. சாலையோர வியாபாரிகள் வங்கிகள் கணக்கு தொடங்கி, அதன் மூலம் டிஜிட்டல் பரிவார்த்தனைகளை நடத்தினால் வங்கிகள் கடன் தருவதற்கு தயாராக இருக்கின்றன.
சாலையோர வியாபாரிகளை அமைப்பு சாரா தொழிலாளர்களாக வகைப்படுத்துவது நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் பரிவார்த்தனைகளை ஊக்கப்படுத்துவதன் மூலமாக சாலையோர வியாபாரிகளின் தொழில் நடவடிக்கைகளை படிப்படியாக முறைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நல்ல விஷயம்தான்.