திஹா கிளினிக் நடத்திய 'நடங்க நல்லூர்' நடைப்பயணம்: 300-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்பு!

நடங்க நல்லூர் – a Senior Citizens Walk
நடங்க நல்லூர் – a Senior Citizens Walk
Published on

"ஆரோக்கியமே செல்வம்" என்பதை வலியுறுத்தும் வகையில், நங்கநல்லூர் திஹா கிளினிக் (Diha Clinic) சார்பில் மூத்த குடிமக்களுக்கான 'நடங்க நல்லூர்' இரண்டாம் ஆண்டு நடைப்பயணம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது.

திஹா கிளினிக்கின் "ஆரோக்கியமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்" (Stay Healthy, Stay Happy) என்ற தாரக மந்திரத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இது கடந்த ஆண்டின் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.

நங்கநல்லூர் மூத்த குடிமக்கள் பேரவையுடன் இணைந்து மற்றும் நங்கநல்லூர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Nanganallur Welfare Associations) ஆதரவுடன் இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மூத்த குடிமக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு வழக்கமான உடற்பயிற்சி, குறிப்பாக நடைப்பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

diha clinic  health awarness walk
diha clinic health awarness walk

திஹா அறக்கட்டளையின் (Diha Trust) அறங்காவலர் திரு. ஸ்ரீநிவாசகோபாலன் சாரி அவர்கள், நங்கநல்லூரில் உள்ள திஹா கிளினிக் வளாகத்திலிருந்து இந்த நடைப்பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நடைப்பயணம் நங்கநல்லூரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, 100 அடி சாலையில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நிறைவடைந்தது.இதில் பங்கேற்றவர்களுக்குப் பிரத்யேக டி-ஷர்ட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய திஹா அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. திரு. ஸ்ரீநிவாசகோபாலன் சாரி , “திஹா கிளினிக் ஏற்கனவே இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு உரைகள் மூலம் உள்ளூர் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. தரமான மருத்துவச் சேவைகளை நியாயமான விலையில் வழங்குவதன் மூலம் நங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் நல்வாழ்வில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த நடைப்பயணம் சமூகத்தின் மீதான எங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் மற்றொரு முயற்சியாகும்,” என்றார்.

diha clinic  health awarness walk 1
diha clinic health awarness walk 1

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு.வி.ராமராவ் கூறுகையில், “நூற்றுக்கணக்கான மூத்த குடிமக்கள் இவ்வளவு உற்சாகமாக அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 'நடங்க நல்லூர்' நிகழ்வு முதியவர்களுக்கான உடல் செயல்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அவர்கள் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.

'நடங்க நல்லூர்' போன்ற முன்னெடுப்புகளின் மூலம், திஹா கிளினிக் உள்ளூர் சமூகத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், மூத்த குடிமக்கள் நீண்ட கால நல்வாழ்வுக்காகச் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ள ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com