UNESCO விருது பெறும் தமிழ்நாடு வனகாப்பக இயக்குநர்: முதலமைச்சர் பாராட்டு!

UNESCO விருது பெறும் தமிழ்நாடு வனகாப்பக இயக்குநர்: முதலமைச்சர் பாராட்டு!

இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான . ஜகதீஷ்பகன் UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (Biosphere Reserve Management) Michel Batisse Award-க்குத் தேர்வாகி உள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில், இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ்பகன், அவர்கள் UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (Biosphere Reserve Management) Michel Batisse Award-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்.

நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com