சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய டாப் 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பிற்கு டிசம்பர் 1-ம் தேதிமுதல் அடுத்த ஓராண்டிற்கு இந்தியா தலைமையேற்க உள்ள நிலையில், இந்தியா குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு தெரிவித்து உள்ளார். அவை:
கொரோனாவுக்கு பின் சர்வதேச அளவில் பல நாடுகளும் பொருளாதாரரீதியாக பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. இந்த கடினமான காலங்களில் கூட இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகும். இதில் முக்கியமானது இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல். இது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம்
மேலும் சூரிய ஒளி உள்ளிட்ட பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அடிப்படையில் இந்தியா முன்னேறியுள்ளது. சர்வதேச அளவில் இப்போது ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
இதுவரை அந்த அந்தஸ்தைப் பெற்று வந்த பிரிட்டனைப் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா அந்த இடத்தை பிடித்து உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உண்மையிலேயே ஒளிவதாக உள்ளது.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.