டியோராமா சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமியின் மாமனிதன்!

டியோராமா சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் சீனு ராமசாமியின் மாமனிதன்!

டெல்லியில் நடைபெறவுள்ள டியோராமா சர்வதேச திரைப்பட விழாவில், இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இத்திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். இப்படம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

இந்திய திரைப்பட இயக்குநர் அடிப்டையில் ஒரு கவிஞர். தன் தாய் மொழியான தமிழ் மொழியில் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இவர் 13 அக்டோபர் மாதம் 1975ம் வருடம் மதுரையில் பிறந்தார்.

கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன் என ஏழு படங்களை இயக்கியுள்ளார்.

Seenu ramaswamy
Seenu ramaswamy

இயக்குநர் சீனுராமசாமியின் முதல் படமான கூடல்நகர் 2007ம் ஆண்டு வெளியானது பரத், சந்தியா, பாவனா மற்றும் பலர் இதில் நடித்திருந்தார்கள் வெகுஜன மக்களின் பாராட்டையும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பின்பு தாய் மற்றும் மகன் உறவுகளின் அடிப்படையில் இயக்கிய இவருடைய இரண்டாவது படம் தென்மேற்கு பருவக்காற்று 2010ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் தமிழுக்காக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய முதல் தேசிய விருதை பெற்றார்.

மாமனிதன் திரைப்படம், டெல்லியில் நடைபெறவுள்ள டியோராமா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இது குறித்த தகவலை இயக்குநர் சீனுராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், ட்ரீம் கேட்சர் மற்றும் அர்பா சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு, விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com