ஜார்க்கண்டில் சிபிஐ (மாவோயிஸ்டுகள்) புதைத்த சக்திவாய்ந்த 5 ஐஇடி குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஜார்க்கண்டில் சிபிஐ (மாவோயிஸ்டுகள்) புதைத்த சக்திவாய்ந்த 5 ஐஇடி குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சிபிஐ மாவோயிஸ்டுகள் புதைத்த ஐந்து சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை (IED) பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்களை குறிவைக்க சிபிஐ மாவோயிஸ்டுகளால் ஐஇடிகள் புதைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

20 கிலோ மற்றும் 12 கிலோ உட்பட நான்கு ஐஇடி குண்டுகள் தும்பஹாகா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் சோட்டா குய்ரா மற்றும் மரதிரி கிராமங்களுக்கு இடையில் ஒரு வனப்பகுதியில் புதைக்கப்பட்ட 5 கிலோ ஐஇடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக திங்களன்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்து வெடிகுண்டுகள் புதைக்கப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டதுமே உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கப் படையினர் அழைக்கப்பட்டு அவர்கள் மூலமாக அனைத்து ஐஇடி குண்டுகளுமே செயலிழக்கம் செய்யப்பட்டன.

மிசிர் பெஸ்ரா உள்ளிட்ட உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர்களின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ஜனவரி 11ஆம் தேதி முதல், மாவட்டத்தின் முக்கிய கோல்ஹான் பகுதியில் சிஆர்பிஎஃப், கோப்ரா மற்றும் ஜார்கண்ட் ஜாகுவார் ஆகியோருடன் மாவட்டக் காவல்துறையும் இணைந்து மாபெரும் சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் சிபிஐ (மாவோயிஸ்டுகள்) நடத்திய IED குண்டுவெடிப்புகளில் 10 வயது சிறுவன் ஒருவனுடன் வயதான பெண்கள் இருவர் உட்பட 8 கிராம மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடன் CRPF வீரர்கள் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com