விவாகரத்து விதிகள் மாற்றப்பட்டதால் திருமணத்தை வெறுக்கும் சீன இளைஞர்கள்!

விவாகரத்து விதிகள் மாற்றப்பட்டதால் திருமணத்தை வெறுக்கும் சீன இளைஞர்கள்!

சீனாவில் திருமணங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அமலுக்கு இருந்த லாக் டவுண், குடும்ப உறவுகளுக்கு மத்தியில் பல கசப்புணர்வை ஏற்படுத்தியிருபபதாகவும் அதன் காரணமாக திருமணம் செய்ய முன் வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

திருமணம் செய்ய விரும்பாத இளைய தலைமுறையினர் அதிகரித்து வருவது சீனாவின் புது தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. திருமணச் செலவுகள் அதிகரித்து வருவதாக சிலர் சுட்டிக்காட்டினாலும், விவகாரத்து விஷயங்களில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்தான் முக்கியமான காரணமாக தெரிகிறது. விவகாரத்து என்பது நாளுக்கு நாள் சீனாவில் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.

திருமணம் என்பது சூதாட்டம். என்னைப் போன்ற சாமானியன் தோற்றுப்போனால் வரும் இழப்பு அதிகம் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் சீன இளைஞர்கள் கருத்து தெரிவித்தது, கடந்த ஆண்டு சீனா புத்தாண்டு கொண்டாடங்களின் போது இணையத்தில் வைரலானது. திருமணங்கள் செய்துகொண்டு குழந்தைகள் பிறப்பதை உறுதிப்படுத்துவிதமாக விவகாரத்து விதிகளை சீனா அரசு கடுமையாக்கியிருந்தது.

இதுதான் இளைய தலைமுறையினரின் கசப்புணர்வுக்கு காரணம். சீனாவில் விவகாரத்து பெறுவது எளிதான விஷயமல்ல. விவகாரத்து செய்ய வேண்டுமானால் அதற்கரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டும். ஒருவேளை வாழ்க்கை துணைவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர் ஒப்புதல் தரும் வரை காத்திருக்கவேண்டும்.

கடந்த ஆண்டில் 6.83 மில்லியன் தம்பதிகள் மட்டுமே திருமணம் செய்வதற்காக பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த சென்ற ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வந்தாலும் கடந்த ஆண்டில் வெகுவாக குறைந்திருக்கிறது என்று சீனா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. 2021ல் 11.6 மில்லியன் மக்கள் மட்டுமே திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இது குறைந்து கொண்டே வருகிறது. அதே போல் பிறப்பு விகிதமும் பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் குறைந்திருக்கிறது. ஆயிரம் பேருக்கு 7.52 விகிதம் என்று கடந்த 2021ல் இருந்த விகிதம் 2022ல் 6.77 விகிதமாக குறைந்திருக்கிறது.

அதே நேரத்தில் 2022ல் சீனாவின் மக்கள்தொகையும் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. கொரானா தொற்று பரவல் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவு, உக்ரைன் போர், மாறிவரும் உலக பொருளாதார சூழலில் சீனாவின் வளர்ச்சி சிக்கி தவிக்கிறது. ஒரு பக்கம் பிறப்பு வளர்ச்சி விகிதம் குறைவு, இன்னொரு பக்கம் திருமணம் செய்து கொள்ள தயங்கும் இளைய தலைமுறை. சீனாவில் குடும்ப அமைப்பு முறையில் சமத்துவம் இழந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

குழந்தைகளின் அவசியம் பற்றியும், திருமண வாழ்க்கை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசாங்கம் முன்வந்து நடத்துமளவுக்கு சீனாவில் நிலைமை மோசமடைந்திருக்கிறது. சீனாவில் 20 முக்கிய நகரங்களில் சிறப்புத் திட்டங்களை கொண்டுவரப்போவதாக சீன அரசு அறிவித்துள்ளது. வேலை, ஊதியம் ஆகியவற்றை விட குடும்பம் முக்கியம் என்னும் கோஷத்தை முன்வைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சீனாவில் நடப்பதெல்லாம் இந்தியர்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com