பொதுமக்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு.. தீபாவளி மறுநாள் அரசு விடுமுறை!

முதலமைச்சர் அறிவிப்பு
முதலமைச்சர் அறிவிப்பு
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பண்டிகை என்றாலே அரசு விடுமுறை தான். அனைத்து பண்டிகை வரும் முன்னரே மக்கள் விடுமுறையை கணக்கு பண்ணி வைத்து கொள்வார்கள். அதுவும் இப்படி ஓடி கொண்டிருக்கும் காலத்தில் லீவ் என்ற பெயரை கேட்டாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பெரும் கவலையோடு இருந்தனர். வரும் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் 2 நாட்களில் தீபாவளியை முடித்து விட்டு உடனே திரும்ப வேண்டும் என கவலை கொண்டிருந்தனர். இவர்களின் கவலையை போக்கும் விதமாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறுநாள் திங்கட்கிழமையான 13ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு தீபாவளியை எதிர்வரும் 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com