தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உணவுகளின் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு!

தீபாவளி உணவு
தீபாவளி உணவு
Published on

தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொருட்களின் தரத்தை கண்காணிக்க இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய முடிவு.

தீபாவளி இந்திய அளவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். பல மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி முக்கிய அம்சங்களில் ஒன்று தின்பண்டங்கள் ஆகும். இதனால் தீபாவளி முன்னிட்டு இந்தியா முழுவதும் அதிக அளவில் இனிப்பு மற்றும் கார வகைகள் அதிகம் விற்பனையாகும்.

இந்த நிலையில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொருட்களினுடைய பாதுகாப்பை உறுதி செய்யவும், தரத்தின் தன்மையை கண்டறியவும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது.

இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தினுடைய உயர் அதிகாரி கமலா வர்தன ராவ் செய்தியாளரிடம் தெரிவித்தது, இந்தியாவில் முக்கிய பண்டிகையில் ஒன்று தீபாவளி. தீபாவளிக்கு அதிக அளவில் உணவு வகைகள் விற்பனையாகும். இதை அடுத்து மக்களுக்கு சென்றடையும் உணவு வகைகள் மற்றும் கார இனிப்பு வகைகளின் தரத்தை கண்டறிய நாடு முழுவதும் 4000 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுக்கள் உணவகங்கள் மற்றும் சில்லறை உணவு நிலையங்கள், உணவு தயாரிப்பு கூடங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு உணவு பொருளின் தரத்தை உறுதி செய்யும்.

தற்போது தொடங்கியுள்ள பண்டிகை காலத்தில் அதிகமான இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிகமாக விற்பனையாவதால் பல நிறுவனங்கள் உணவுப் பொருட்களின் தரத்தை குறைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து லாபத்தை அடைய முயற்சிக்கின்றனர். இவற்றை தடுக்கவே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், நாடு முழுவதும் இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்.

மேலும் பால் மற்றும் பால் பொருட்களினுடைய தரத்தை ஆய்வு செய்ய தேசிய பால் பண்ணை கூட்டமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com