தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்... 8 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்!

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்... 8 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்!
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்குகிறது.

வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் பலரும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போவதற்காக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.  ரயில் பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, இன்று காலை 8 மணி முதல் ரயில்வே கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ஆம் தேதியும், 13ஆம் தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10ஆம் தேதியும், ரயிலில் பயணம் செய்யலாம். 14ஆம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11ஆம் தேதி ரயிலில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தீபாவளிக்கு முடித்துவிட்டு பணியிடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக வருகின்ற 16, 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் முன்பதிவு செய்தால் முறையே நவம்பர் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று டிக்கெட் கவுண்டர்கள் ஓபன் ஆன 8 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com