தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அறிவிப்பு!

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அறிவிப்பு!

Published on

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-03-2023 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-03-2023 செவ்வாய்க்கிழமை சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” மாலை 5.00 மணி அளவில் நடைபெறும் என அறிவித்துள்ளார். அப்போது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது .

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் .தொகுதி வளர்ச்சிப் பணிகள், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com