கைது செய்யும் அளவிற்கு உதயநிதி பெரிய ஆள் இல்லை - ஆதவ் அர்ஜுனா அட்டாக்..!!

தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக , அதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகளை காட்டமாக விமர்சித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
Aadhav Arjuna
Aadhav Arjuna
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்ததிலிருந்து, அரசியல் வட்டாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மதுராந்தகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக, அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகளை மட்டுமல்லாமல், தங்களது கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விளாசியுள்ளார்.

ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக பேசுகையில்," எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இடைத்தேர்தலில் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். இவ்வளவு காலமாக இருந்த அந்த கலாச்சாரத்தை உடைத்து உள்ளோம். இங்கு நீர்வளத் துறை அமைச்சர் வந்து இருக்கிறார் , பொதுப்பணித்துறை அமைச்சர் நான் வந்திருக்கிறேன். இங்கு குடிநீர் இல்லை, ரோடு இல்லை என்று இனி சொல்லாதீர்கள்.

கடந்த முறை தேர்தலில் எவ்வாறு ₹5000 வாங்கினீர்களோ? இந்த முறையும் தீபாவளிக்கு டிரஸ் வாங்கி தர , திமுக ₹5000 பணத்துடன் தேடிவருவார்கள், அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, இந்த முறையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்." என்று கூறினார்.

மேலும் அவர் , "திமுக 75 வருட கட்சி அது ஒரு ஆலமரம், முருங்கை மரம் என்றெல்லாம் சொன்னார்கள். ஏதோ அவர்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்பதைப் போல சட்டமன்றத்திற்கு வந்தார்கள். ஆனால், முடியும் பொழுது யாருமே இல்லை. முதல்வர் வரும் போது யாரும் இருக்க மாட்டார்கள். அவரை பேச சொல்லி வற்புறுத்துவார்கள். ஆனால், அவர் பேசத் தொடங்கினால் வெளியே சென்று விடுவார்கள்.

முதல்வருக்கு உதயநிதி கைது செய்யும் எண்ணமெல்லாம் இல்லை , அந்த அளவிற்கு அவர் பெரிய ஆளும் இல்லை. திமுகவினரை கைது செய்ய முடியாது, அவர்களை தொட முடியாது, தொட்டால் அவ்வளவு தான். என்றெல்லாம் உண்மை பேசி இருந்தார்கள். பெண்களை அசிங்கப்படுத்தினால் என்ன ஆகும் என்பதை காட்டத்தான், 10 மணி நேரம் அழைத்துச் சென்று விசாரிக்கும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை என, 10 நிமிடத்தில் அனுப்பிவிட்டார்கள் என்று கூறினார்.

aadhav arjuna
aadhav arjuna image source:thehindu

கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இன்று இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகியது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. தற்போது எடப்பாடி பழனிச்சாமியால் இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெ., ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது." என்று பேசியுள்ளார்.

அவர் , தங்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்களையும் விடவில்லை .​எங்கள் தலைவர் நினைத்தால், அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருக்கலாம். அவர் சமூகநீதியில் உறுதியாக இருந்ததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி சேர்ந்தார். கம்யூனிஸ்டுகளிடம் கேட்கிறேன், கடந்த ஆட்சியில் பொதுப்பணி துறையில், நெடுஞ்சாலைத்துறையில், ஊழல் நடந்ததா இல்லையா? குடும்ப நிதி, கட்சி நிதி எல்லாம் வாங்கினார்களா இல்லையா? திமுக ஊழல் செய்யவில்லை என்று கம்யூனிஸ்டுகளால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

​அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , எங்களிடம் பணம் வங்கி ராஜினாமா செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். அவரது தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் எதற்காக வாபஸ் வாங்கினார்? விசில் சின்னத்தில் அங்கு வேட்பாளர் நின்றிருந்தால் ஈபிஎஸ்ஸும் தோற்றிருப்பார் .அவர் எடப்பாடி தொகுதியில் மீண்டும் நின்றால், ஒரு கல்லூரி மாணவியை நிறுத்தி அவரையும் தோற்கடிப்போம். என்று ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com