

சட்டசபையில் முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் அறிவித்து இருந்த நிலையில், இன்று அரசு பள்ளியில் பயின்ற கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. அதேபோல் நாளை (மே 15) கடந்த ஆட்சியில் பெண்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ரூ.ஆயிரம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
அவரது அறிக்கை: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின்,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
என பதிவித்துள்ளார்