இதே 0 percentile சிஸ்டம் அனிதாக்கு இருந்திருந்தா, அவங்க டாக்டர் ஆகிருப்பாங்க.. எம்.எல்.ஏ. சரமாரி கேள்வி!

எம்.எல்.ஏ. எழிலன்
எம்.எல்.ஏ. எழிலன்

இதே 0 percentile சிஸ்டம் அனிதாக்கு இருந்திருந்தா, அவங்க டாக்டர் ஆகிருப்பாங்க இல்லையா என எம்.எல்.ஏ எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே முதுநிலை மருத்துவர் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வுக்குச் சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவத்தில் முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது. இதனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், இந்த அறிவிப்பின் மூலம் நீட் தேர்வால் பயனில்லை என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது என்று காட்டமாக விமர்சித்திருந்தார். 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்ட மன்ற உறுப்பினர் எழிலன், நீட் தேர்வு என்பது பெற்றோர், மாணவர்களின் பிரச்சனை கிடையாது. இது மருத்துவ கட்டமைப்பிற்கு உண்டான பிரச்சனை. மாணவர்களை தரப்படுத்துவதாக செயற்கையான முறையை கொண்டு வந்து திணிக்கிறார்கள், இதே 0 percentile சிஸ்டம் அனிதாக்கு இருந்திருந்தா, அவங்க டாக்டர் ஆகிருப்பாங்க இல்லையா என கடுமையாக சாடியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com