திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்தும், கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதானி விவகாரம், பிபிசி ஆவணப்படம், சேதுசமுத்திர திட்ட பிரச்னைகளை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அமைச்சர்களுடன் விவாதிக்க பட்டது. இந்த பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக திமுக கழகம் வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில், வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்புவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில் கழகத் தலைவரான ஸ்டாலின், தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறை குறித்து ‘பிபிசி’ வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை குறித்தும், இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை மற்றும் இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com