திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்.பியுமான ஆ. ராசாவிற்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
-இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது;
திமுக மக்களவை உறுப்பினரான ஆ. ராசா, கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு முறைகேடாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி, அதன் பயனாக பினாமி நிறுவனத்தின் பெயரில் ஆ.ராசா ரூ.55 கோடி ரூபாய்க்கு 45 ஏக்கர் நிலத்தை கோயம்புத்தூரில் வாங்கியதாகவும் அந்த நிலத்தை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆ. ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015–ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.