‘தமிழ்நாடு விழிப்போடு இருக்கிறது உங்களுக்கு இங்கே இடமில்லை’ கனிமொழி அதிரடி பேச்சு!

kanimozhi MP
kanimozhi MP

மிழ்நாடு விழிப்போடு இருக்கிறது. உங்களுக்கு இங்கே இடமில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்கிற கனவோடு இருப்பவர்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள் என்று திமுக எம்.பி கனிமொழி பேசியிருக்கிறார்.

தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏராளமான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கலைஞரின் புகழை பாடுவதோடு, ஆளுநரையும் மத்திய அரசையும் எதிர்த்து பேசுவதன் மூலமாக கருத்தரங்கங்கள் வழியாக தி.மு.க தலைவர்கள் கவனம் பெற்று வருகிறார்கள்.

நேற்று நடந்த கருத்தரங்கத்தில் பேசிய கனிமொழி எம்.பி,  ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் எப்போதும் தொண்டர்களோடு நெருக்கம் காட்டியவர் கலைஞர். தொண்டர்களிடம் கோபப்பட்டால் கூட, உடனே  தாயுள்ளத்தோடு அரவணைத்துக்கொண்டவர் என்று கலைஞருக்கு புகழாராம் சூட்டினார்.

தலைவர் கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக ஸ்டாலின் ஆட்சியை சிறப்பாக  நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பாராட்டியவர், ஆளுநரையும் மத்திய அரசையும் தன்னுடைய பேச்சில் விமர்சித்தார். வெளிநாட்டுக்கு சென்றால் மட்டும் முதலீடு வந்துவிடுமா என்று ஆளுநர் கேள்வி எழுப்பினார். அதை ஏன் அவர் பிரதமரிடம் கேட்கவில்லை?

மறுபடியும் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். பொது சிவில் சட்டம் பற்றி பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.  அதற்கு தற்போது அவசியம் வந்தது என்பது குறித்த கேள்விகளுக்கு விளக்கம் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ, தனிமனிதர்கள் மீதோ அக்கறை காட்டாத ஒரு அரசுதான் டெல்லியில் இருக்கிறது

தமிழ்நாடு எப்போதும் விழிப்போடு இருக்கிறது. உங்களுக்கு இங்கே இடமில்லை என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம்.  இதே போன்று ஒவ்வொரு மாநிலமும் உங்களை ஒதுக்கி வைக்கும் நிலை வரும். எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பாட்னாவில் பேசியிருக்கிறார்கள். அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது.

ஏதாவது ஒரு பிரச்சினையை தினமும் பேசிக்கொண்டிருப்பதற்காகவே ஒரு ஆளுநரை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்காமல் தமிழகம் என்றெல்லாம் அழைக்கவேண்டும் என்று சொல்வதெல்லாம் மக்களை புண்படுத்தாதா?

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை யாராலும் குலைக்கமுடியாது. மத்தியில் ஆட்சி மாற்றம்  நிச்சயம் வரும். சமூக நீதிக்கு முன்னுரிமை தரும் தமிழகத்தின் நடைபெறும் ஆட்சி போல் மத்தியிலும் ஒரு புதிய ஆட்சி வரும். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடும் நேரத்தில், மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் அவருக்கு நாம் செலுத்த வேண்டிய மிகப்பெரிய புகழஞ்சலியாக இருக்கும் என்றார்.

செந்தில் பாலாஜி தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால் ஆளுங்கட்சியினரின் அரசியல் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் அடுத்தடுத்து முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் அதிரடியாக பேச ஆரம்பித்திருப்பது அறிவாலய வட்டாரங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com