

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நாட்கள் குறைந்து கொண்டே வரும் நிலையில் அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு பிரச்சாரங்கள் சித்திரை வெயிலுக்கு போட்டியாக அனல் பறக்கும் விதமாக நடந்து வருகிறது. மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வாத விவாதங்களும் சொற்போரும் முற்றி வருகிறது
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 16 ஆம் தேதி முதல் 18 வரை நடைபெறுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவைக் குறித்து நாளை கூடும் மக்களவையில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
மாநிலங்கள் பாதிக்கப்படும் வகையில் அமையும் தொகுதி மறு வரையறை திட்டத்திற்கு முதலமைச்சர் தனது எதிர்ப்பை பல விதங்களில் பதிவு செய்து வருகிறார். காணொளி மூலம் "தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் மாநில உரிமைகள் படுகொலை எனவும் மிரட்டல் என நினைத்தாலும் பரவாயில்லை, 1950 60 காலத்தில் திமுகவை பார்ப்பீர்கள்" என்று பதிவிட்டு பல விமர்சனங்களைப் பெற்றார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவின் நகல் மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு ஆதரவு திரட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மசோதா நாளை தாக்கலாக உள்ள நிலையில் திமுக எம்பிக்கள் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக எம்பி களின் அவசரக் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக தெரிகிறது.
இந்த அவசரக் கூட்டத்தில் தொகுதி வரையறை மற்றும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து திமுக கட்சியினர் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது.