காங்கிரஸ் தலைமைக்கு தி.மு.க.,வின் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமைக்கு தி.மு.க.,வின் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவம் உள்ளவரும், அயராது உழைத்து வரும் பழுத்த அரசியல்வாதியுமானவர் ஈவிகேஎஸ். இளங்கோவன். மக்களின் நன்மதிப்பையும் மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் அன்பையும் பெற்றவர். காங்கிரஸ் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி காலமானதையடுத்து இந்தத் தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. திருமகன் ஈவெரா முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன் ஆவார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக காங்கியஸ் கட்சியின் முன்னாள் தலைவரான இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

'தேர்தலில் நான் போட்டியிடவில்லை' என, இளங்கோவன் அறிவித்த நிலையில், அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:

இளங்கோவன் குடும்பத்தாருக்கு மட்டுமே வாய்ப்பு தருவதில், கட்சி மேலிடம் உறுதியாக இருந்தது.

இதுகுறித்து உள்ளூர் சிறப்புப் பிரிவு போலீசார், உளவுப் பிரிவு போலீசார், பல்வேறு மட்டத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.அதில், 'இளங்கோவன் குடும்பத்தில் மற்றவர்களை விட, அவரையே நிறுத்துவது வெற்றிக்கு வழி வகுக்கும். மக்கள் செல்வாக்கு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளிடமும் தொடர்புடையவர்' என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், தி.மு.க., மற்றும் தமிழக அரசால் நேரடியாக பேச இயலாத இடங்களில், தி.மு.க., குரலாக ஒலிக்க, இளங்கோவனே பொருத்தமானவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும், அவர் கடுமையாக சாடுவார். வரும் 2024ல் லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், காங்., சார்பில் இவரது பிரசாரம் பலம் சேர்க்கும்; தங்களுக்காக பேசும்படி, அவரிடம் வலியுறுத்தலாம். இதை உளவுப்பிரிவு அறிக்கை தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளது.

இதன் பின்தான், முதல்வர் ஸ்டாலினே, இளங்கோவன் வீட்டிற்கு சென்று பேசினார். காங்., தலைமைக்கும், தி.மு.க.,வின் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே, இளங்கோவன் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரே எதிர்பாராதவிதமாக கட்சி மேலிடம் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை அறிவித்துவிட்டது.

இதை அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றிருக்கின்றனர். தனது சொந்தத் தொகுதியான ஈரோடு கிழக்கில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாய்ப்பளிக்கப் பட்டிருப்பதால் அவரது வெற்றி உறுதியாகி விட்டதாகவும், திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணிகளை இளங்கோவன் சரியான முறையில் ஏற்று நடத்துவார் என்றும் கட்சித் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தி.மு.க., வினர் கூறினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com