நாராயணா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம். பெற்றோருக்கு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

நாராயணா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம். பெற்றோருக்கு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
Published on

ன்னும் இரண்டு மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு புது வகுப்புகள் எடுக்கும் நிலையில் தற்போது சேலத்தில் புதியதாக துவங்க உள்ள நாராயணா பள்ளியில் யாரும் மாணவ மாணவிகளை சேர்க்க வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      என்ன நடந்தது?ஏன் பிள்ளைகளை அப்பள்ளியில் சேர்க்க வேண்டாம் என அதிரடி அறிவிப்பு? சிறு அலசல்.

       சிறந்த கல்வி நகரங்களில் ஒன்றாக விளங்கி வரும் சேலம் மாவட்டத்தில் தரமுள்ள உள்ளூர் பள்ளிகளுடன் உலகத்தரமிக்க பன்னாட்டு பள்ளிகளும் இயங்கி வருகின்றன. மக்கள் அவரவர் வசதி  விருப்பத்திக்கேற்ப பள்ளிகளை தேர்ந்தேடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி வருகின்றனர். இந்தப் பள்ளிகளின் வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளது நாராயணா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் பள்ளியும். 

      சேலத்தில் நரசோதிப்பட்டி மற்றும் இன்னும் இரண்டு இடங்களில் இப்பள்ளி செயல்படும் என நிர்வாகம் அறிவித்து இருந்தது. நாராயணா டெக்னோ எனும் பெயரில் (சி பி எஸ் சி) புதியதாக துவங்கியுள்ள இந்தப் பள்ளிக்கு விளம்பரங்கள் மூலமும் பிள்ளைகளை சேர்த்து வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென்று இப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என்ற  கல்வித்துறையின் எச்சரிக்கை மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

     விசாரித்ததில் இப்பள்ளி கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் கட்டிடம் கட்ட முறையான அனுமதி எதுவும் பெறவில்லை எனவும், கட்டிடம் கட்டாமலேயே மாணவர்களை சேர்ப்பது முறையற்றது என்றும் அங்கு சென்று வந்த பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் மாவட்ட நிர்வாகம் முதல் கட்ட நடவடிக்கையாக பள்ளி கல்வித்துறை மூலம் இந்த அறிக்கையை வெளியிட்டதாக தெரிகிறது.    

      தங்கள் பிள்ளைகளை சேர்க்க விசாரித்த பெற்றோர் ஒருவர் (பெயர் வேண்டாம் என்று சொல்லி) கூறும்போது

      “இந்தப் பள்ளியின் கட்டணம் அதிகம் என்றாலும் சர்வதேச தரத்தில் இந்தியா முழுவதும் இப்பள்ளி இயங்குவதால் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தர ஆசைப்பட்டு விசாரித்தோம். ஒன்பதாம் வகுப்பு வரை இயங்கும் எனவும் கட்டண சலுகையுடன் முதலில் வரும் நூறு மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்றெல்லாம் சொன்னார்கள். கட்டிடம் எங்கே என்றதற்கு இங்கே அங்கே என்று அலைக்கழித்தார்கள். இரண்டே மாதங்களில் கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி திறக்கப்படும் என்றும் சொன்னார்கள். கட்டிடமே இன்றி பிள்ளைகளை சேர்ப்பது என்பது சரியாக பட வில்லை என்பதால் நாங்கள் உள்ளூர் பள்ளியிலேயே சேர்த்து விட்டோம். ஆனால் இவர்கள் முறையான அனுமதியும் பெற வில்லை என்பது இப்போதுதான் தெரிகிறது. 

 விடுமுறை விடப்பட்டு இன்னும் இரண்டு மாதங்களில் பள்ளிகள் திறக்கப்படும். சூழலில் இது போன்ற செய்திகள் பெற்றோரை குழம்ப வைப்பதுடன் எச்சரிக்கையையும் தருகிறது என்று சொல்லலாம். 

      கருத்துள்ள பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படித்தாலும் ஜொலிப்பார்கள் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ளும் காலம் என்று வருமோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com