ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை

12 மணி நேர வேலை மசோதாவில் அரசியல் செய்ய கூடாது - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. இந்த திருத்த சட்டத்தை கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5 வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் என பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆளுநராக இருப்பதால் அரசியல் கருத்துக்களை கூற முடியாது. நான் பாஜக மாநிலத் தலைவராக இருந்த போது கூட்டணி கட்சிகளுடன் மரியாதையுடன் இருந்துள்ளேன். தற்போதைய கூட்டணி கட்சித் தலைவர்களிடம் அரசியல் கருத்துகளை கேளுங்கள், இதற்குள் என்னையையும் இழுக்க வேண்டாம் என தெரிவித்தார் அவர் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது 8 மணி நேர வேலையா? 12 மணி நேர வேலையா? என தொழிலாளர்கள் விருப்பப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பது தான் சட்டம். அதிக நேரம் வேலை செய்து விட்டு, அதிக நேரம் ஒய்வு எடுத்தால் மனித சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிய சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை. 12 நேர வேலை விவாகரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com