இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக பத்து லட்சம் ரூபாய் இருக்கிறதா? மாற்றுவதற்கு இரண்டு மாதங்களாகும்!

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக பத்து லட்சம் ரூபாய் இருக்கிறதா? மாற்றுவதற்கு இரண்டு மாதங்களாகும்!

நேற்றிரவு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நம்மிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் வங்கிக்குச் சென்று மாற்றிக்கொள்ளலாம். வரும் செவ்வாய் கிழமை முதல் செப்டம்பர் இறுதிவரை எந்நேரமும் வங்கியிலிருந்து மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம்.

7 ஆண்டுகளுக்கு முன்னர் டீமோனிடைசேஷன் போல், மினிடீமானிடைசேஷனை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகிறது. ஏற்கனவே பல வங்கிகளின் ஏ.டி.எம்மில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருப்பது குறைந்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களாக எந்த ஏ.டி.எம்மிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இல்லையென சொல்லலாம்.

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வரும் செவ்வாய் கிழமை முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாகமாற்றிக் கொள்ளலாம். ஆனால், அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் வர வைக்க முடியும என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை உங்களிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக பத்து லட்சம் ரூபாய் இருந்தால் அதையெல்லாம் தினமும் வங்கிக்கு எடுத்துச் சென்றுதான் வேறு ரூபாய் நோட்டுகளாகமாற்றிக்கொள்ளலாம். டீமானிடைசேஷன் நேரத்தில் கேட்டது போல் பான் நம்பர், ஆதார்நம்பரெல்லாம் கேட்க மாட்டார்கள். ஆனால், 20நோட்டுகளை மட்டுமே எடுத்துச் சென்று மாற்றிக் கொள்ள முடியும்.

தினமும் 20நோட்டுகளை வங்கிக்கு எடுத்துச் சென்று மாற்றுவதற்கு2மாதங்களாகிவிடும். வழக்கத்திற்கு மாறாக வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட ஆரம்பித்தால் ஒருவேளை விரைவாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால், குடும்பத்தினரோடு தினமும் வங்கிக்குப் போய் மாற்றினால் ஒருவேளை பத்து லட்சம் ரூபாயை பத்திரமாக மாற்றிவிடலாம்.

இந்தியா முழுவதும் எந்தவொருவங்கிக்கிளையிலும் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. ஆனால், திரும்பப் பெறப்படுகின்றன என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. வங்கிகளில் வரவு வைப்பதிலும்கட்டுப்பாடுகள் இல்லையென்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டீமானிடைசேஷன் நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகள், 100 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாகவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியதாகவும் தற்போது தட்டுப்பாடுகள் நீங்கிவிட்ட காரணத்தால் திரும்பப் பெறுவதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்திருக்கிறது. இதுவரை இப்படியொரு விளக்கத்தை வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே கடந்த மாதத்தில் 3.62 லட்சம் கோடியாககுறைந்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதம் என்கிறார்கள். இவற்றில் பெரும்பகுதி

கருப்புப் பணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். மூட்டைப் பூச்சியை ஒழிக்க, வீட்டை எரிப்பதா என்று கேலி செய்கிறது, காங்கிரஸ் கட்சியின் ஐ.டி டீம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com