தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் குறித்து தெரியுமா?

தமிழக அரசு அரசாணை..!
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
Published on

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகாலவாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10,000 அபராதம்.

பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்.

தேவையில்லாமல் அதிக ஹரான் மற்றும் அதிக சத்தம் எழுப்பினால் ரூ.1,000 அபராதம்.

காப்பீடு இல்லாத வாகனத்தை இயக்கினால், இனி 2,000-க்கு பதில் ரூ.4,000 அபராதம்.

வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20,000 அபராதம்.

அலுவலர்களிடம் தவறான தகவல் அளித்தால் ரூ.2000 அபராதம்.

கார்கள், ஜீப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால்ரூ.2000 அபராதம்.

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை இயக்கினால் ரூ.10,000 அபராதம்.

செல்போன் பேசிக் கொண்டோ, அதி வேகமாகவோ வாகனம் ஓட்டினால், முதல்முறை ரூ.1000, இரண்டாவது முறையிலிருந்து ரூ.10,000 வரை அபராதம்.

இரு சக்கர வாகனங்களைப் பதிவு செய்யாமல் இருந்தால் முதல் முறை ரூ.500, இரண்டாம் முறை ரூ.1500 அபராதம்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்.

தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் மற்றும் பின்னால் இருப்பவர்தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்.

போக்குவரத்து சிக்னலை மதிக்காமல், சாலையைக் கடப்பவர்களுக்கு முதல் முறைரூ.500, இரண்டாவது முறை ரூ.1500 அபராதம்.

வாகன ஓட்டுநர் மதுபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர்மதுபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, இருவரிடமும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com