கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?

கடந்த மாத  ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.1,57,090 கோடி வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாத ஜி.எஸ்.டி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.28,411 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.35,828 கோடியும் வசூலாகி இருக்கிறது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,363 கோடி ஆகும். கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com