அயோத்தி ராமர் கோவிலுக்கு குவியும் பிரமாண்ட பரிசுகள்.. என்னென்ன தெரியுமா?

gift for ayodhya ram mandir
gift for ayodhya ram mandir
Published on

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விலை மதிப்புள்ள பல்வேறு கலைப் பொருட்களை பக்தர்கள் பரிசு பொருட்களாக அயோத்திக்கு அனுப்பிவருகிறார்கள்.

சிறப்புப் பரிசுகள்

  • 108 அடி நீள தூபக் குச்சி

  • 2,100 கிலோ எடையுள்ள மணி

  • 1,100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கு

  • தங்க பாதணிகள்

  • 10 அடி உயர பூட்டு மற்றும் சாவி,

  • எட்டு நாடுகளில் ஒரே நேரத்தில் நேரத்தைக் குறிக்கும் கடிகாரம்

  • சீதாதேவி பிறந்த ஊராக கருதப்படும்  ஜனப்பூரிலிருந்து வெள்ளி காலணிகள், ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகள் சுமார் 30 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
        

  • சீதை சிறை வைக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கையில் உள்ள அசோகவனத்தில் (அசோக் வாடிக்கா) தற்போது இருந்து பாறை ஒன்றை அந்த நாட்டு பிரதிநிதிகள் அயோத்தி கோவிலுக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.
         

gift for ayodhya ram mandir
gift for ayodhya ram mandir
  • குஜராத் மாநிலம் வதேராவில்  376 கிலோ குக்குள் என்ற பிசின், 376 கிலோ தேங்காய் மட்டைகள், 190 கிலோ நெய், 1470 கிலோ பசஞ்சாணம், 420 கிலோ மூலிகைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட  பிரமாண்ட ஊதுபத்தி 3.5 அடி சுற்றளவும் 308 அடி நீளமும் கொண்டது. இதன் எடை ஆயிரத்து 610 கிலோ ஆகும்.

  • கோவிலில் நிறுவுவதற்காக 44 அடி உயரம் கொண்ட பித்தளை கொடிக்கம்பம் மற்றும் ஆறு சிறிய கொடிக் கம்பங்கள் ஆகியவைகளுடன்  குஜராத்தின் தனியார் அமைப்பால் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் பூசிய பெரிய ட்ரம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

  • குஜராத்தின் சூரத் நகரில் தயாரிக்கப்பட்ட ராமர் மற்றும் அயோத்தி கோயிலின் படங்கள் அச்சிடப்பட்ட சிறப்புமிகு புடவை பரிசாக கோவிலுக்கு வழங்கப்பட்டது.
     

  • தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு மூலம் தயாரிக்கப்பட்ட   9.25 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட பஞ்சலோக ராட்சத விளக்கை வதோதராவில் வசிக்கும் விவசாயி பரிசாக வடிவமைத்துள்ளார். 1,100 கிலோ எடையுள்ள இந்த விளக்கு 851 கிலோ நெய் கொள்ளளவு பிடிக்கும் திறன் கொண்டுள்ளது.


  • சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்கள் மற்றும் 2 கிலோ வெள்ளியைக் கொண்டு ராமர் கோயிலின் கருப்பொருளில் நெக்லஸை உருவாக்கியுள்ளார். 40 கைவினைஞர்களால் 35 நாட்களில் வடிவமைப்பு செய்யப்பட்டு பரிசாக வழங்கப்பட்டுள்ளது இந்த நெக்லஸ். 

  • ஹைதராபாத்தைச் சேர்ந்த 64 வயதான பக்தர் தங்க முலாம் பூசப்பட்ட பாதணிகளை பரிசாகத் தர கிட்டத்தட்ட 8,000 கிமீ தூரம் நடந்து அயோத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

  • உத்தர பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் மிகப் பிரமாண்டமான மணி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எட்டு வகையிலான உலோகத்தால் தயாரிக்கப்பட்ட அந்த மணியின் எடை 2,100 கிலோ ஆகும்.பரிசாக அளிக்க இரண்டு ஆண்டுகளாக  இது உருவாக்கப்பட்டுள்ளது
          

  • விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் என்பவர் 7000 கிலோ எடை உள்ள "ராம் அல்வா" என்ற பாரம்பரிய இனிப்பு வகையை தயார் செய்து பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

  • திருமலை திருப்பதி கோவிலில் இருந்து ஒரு லட்சம் லட்டுக்களை அனுப்புவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.          

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com