கூகுள் தேடலில் டாப்-10 இடம்பிடித்த சொற்கள் எவை தெரியுமா?

கூகுள்
கூகுள்
Published on

உலகளவில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப்-10 வார்த்தைகள் எவை என்பதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், முதலாவதாக வோர்டில் (Wordle) என்ற சொல் இடம்பிடித்துள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு ஆகும். அதிகமான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக 2-வது இடம்பிடித்தது இந்தியா -இங்கிலாந்து (India vs England) சொல் ஆகும்.  உக்ரைன் என்னும் சொல் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. அதையடுத்து ராணி எலிசபெத் 4-வது இடம், இந்தியா –தென்னாப்பிரிக்கா 5-வது, உலகக்கோப்பை 6-வது, இந்தியா - மேற்கிந்திய தீவுகள் 7-வது, ஐ-போன் 14 ரகம் 8-வது, அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர் 9-வது இடங்களும் இந்தியன் பிரீமியர் லீக் சொல்  10-வது இடமும் பிடித்து கூகுளீல் அதிகம் தேடப்பட்டுள்ளது. குறிப்பாக விளையாட்டு குறித்த சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com