முதல் முறை Cyber truck ஓட்டிய எலான் மஸ்க் என்ன சொன்னார் தெரியுமா?

முதல் முறை Cyber truck ஓட்டிய எலான் மஸ்க் என்ன சொன்னார் தெரியுமா?
Published on

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் பலரது எதிர்பார்ப்பில் இருக்கும் சைபர் ட்ரக்கை இயக்கியுள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக எலான் மஸ்க்கே இந்த செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் வாகனம் எது என்று கேட்டால் அது டெஸ்லா நிறுவனத்தின் 'Cyber truck' தான். அந்த வாகனத்தின் டிசைனை யார் வேண்டுமானாலும்  கையிலேயே வரைந்து விடலாம். அந்த அளவுக்கு மிகவும் எளிமையாகவும் அதே நேரம் கம்பீரமான தோற்றத்தில் சைபர் ட்ரக் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பலரது கவனத்தைக் கவர்ந்துவிட்டது. எனவே இது எப்போது உருவாக்கப்பட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

பொதுமக்கள் மட்டுமின்றி ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட ட்ரக் வாகனங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களும் சைபர் டிராக்கின் அறிமுகத்தின் மீது பார்வை வைத்துள்ளனர். இத்தகைய எதிர்பார்ப்பில் இருக்கும் சைபர் ட்ரக்கை டெஸ்லா நிறுவனம் எப்போது அறிமுகம் செய்யும் என உறுதியாகக் கூறவில்லை. 

சைபர் ட்ரக்கின் புகைப்படங்களை சில வருடங்களுக்கு முன்பே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்படி எல்லாம் ட்ரக் உருவாக வாய்ப்பில்லை என நம்முள் சிலர் நினைத்து வந்த நிலையில், அதே தோற்றத்தில் தான் இருக்கப்போகிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் சமீபத்தில் Tweet ஒன்றைப் போட்டுள்ளார். அந்த பதிவில் "ஆஸ்டினில் சைபர் ட்ரக்கை இயக்கினேன்" என குறிப்பிட்டு அதன் புகைப்படத்தையும் போட்டிருந்தார். 

அந்த புகைப்படத்தில் இருந்த சைபர் ட்ரக்கானது அவர் ஏற்கனவே கொடுத்திருந்த வடிவத்திலேயே உள்ளது. இந்த வடிவத்தை முதல்முறையாக 2019 நவம்பரில் உலக அளவில் வெளியிட்டனர். அதன் பின்னர் சைபர் ட்ரக்கின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்காக டெஸ்லா நிறுவனம் முயற்சிகள் செய்து வந்தது. ஆனால் கொரோனா காரணமாக சைபர் ட்ரக்கின் பணியில் தாமதம் ஏற்பட்டது. எனவே சமீபத்திய பதிவின்படி டெஸ்லாஸ் சைபர் ட்ரக் இந்த வருட இறுதியில் இருந்து உற்பத்தி செய்யப்பட இருக்கிறது என்பதை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் 2024ல் இதன் உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் வேறு ஏதாவது மாற்றங்கள் இருக்குமா என்பது செப்டம்பர் மாதத்தில் இதன் உற்பத்தி தொடங்கிய பிறகு தான் தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com