இந்தியாவின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் எங்கு உள்ளது தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் எங்கு உள்ளது தெரியுமா?

ராஞ்சியில் நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு புதன்கிழமை திறந்து வைத்தார். 165 ஏக்கர் நிலப்பரப்பில், 550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த உயர் நீதிமன்றக் கட்டிடத்தில் 25 குளிரூட்டப்பட்ட நீதிமன்ற அறைகள் மற்றும் 1,200 வழக்கறிஞர்கள் அமரும் வசதி கொண்ட இரண்டு பெரிய அரங்குகள் மற்றும் 540 அறைகள் உள்ளன.

இந்த கட்டிடத்தில் 2000 KVA சூரிய மின் நிலையமும் பொருத்தப்பட்டுள்ளது, இது முழு வளாகத்தின் மொத்த மின் தேவையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்யும்.

இந்தக் கட்டிடத்தைத் திறந்துவைத்த குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரிடம், நீதிமன்றங்கள் இருந்தும் ‘உண்மையான நீதி’ கிடைக்காத ஏழைகளுக்கு அது கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

"நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதைக் கண்டு மகிழ்ச்சியடையும் ஒரு ஏழை குடிமகனின் மகிழ்ச்சிக்கான ஆயுட்காலம் வெகு குறைவு, ஏனெனில், அவருக்கான நீதியாக நீதிமன்றம் கட்டளையிடப்பட்டதைப் பெறாததால், அந்த வெற்றிக்கான மகிழ்ச்சி பெரும்பாலும் குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும்" என்று ஜனாதிபதி கூறினார். அதன் பிறகு தங்களுக்குக் கிடைக்க வேண்டியதைப் பெற எங்கு செல்வது என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை, என்று அவர் மேலும் கூறினார். “ இதை எப்படிச் சாத்தியப் படுத்த முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உண்மையான அர்த்தத்தில் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என்றும் குடியரசுத் தலைவர் முர்மு கூறினார்.

ஒடிசாவில் சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது, இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஏழை மக்களிடமிருந்து தனக்கு நிறைய புகார்கள் வந்ததாக முர்மு கூறினார்.

குடும்ப ஆலோசனை மையத்தில் உறுப்பினராக பணிபுரியும் போது, தான் வழங்கிய ஆலோசனையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உண்மையில் பயனடைந்தார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த அந்த குடும்பங்களை மீண்டும் சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார். நீண்ட காலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்றத்தில் நீதி பெறும் ஏழைகள் வேறு எந்தக் காரணத்துக்காகவும் அடைந்த நீதியைப் இழந்து விடக்கூடாது, அது அவர்களிடம் இருந்து பறிக்கப்படக் கூடாது என்பதற்காக இதுபோன்ற முயற்சிகள் திட்டமிடப்படலாம். என்றும் அவர் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com