பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் எங்கெல்லாம் வந்தே பாரத் ரயில் இயங்குகிறது தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு பதவியேற்றத்திலிருந்து நாட்டில் அங்கங்கே வந்தே பாரத் ரயில் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவை வெற்றிகரமாக செயல் படுத்தப் பட்டும் வருகிறது. இதற்க்கு மக்கள் வரவேற்பபும் அமோகமாக கிடைத்து வருகிறது .

இந்திய ரயில்வே துறையால் இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிகபட்சமாக 180 km/h வேகத்தை எட்டியுள்ளது. வந்தே பாரத் ரயில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் RDSO என்னும் அமைப்பான Research Design and Standards Organisation வடிவமைத்து, சென்னையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ICF) மூலம் தயாரிக்கப்பட்டது தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை - மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 05:50 மணிக்கு புறப்பட்டு 401 கிமீ தூரத்தை கடந்து மதியம் 12:20 மணிக்கு மைசூரு - வை சென்றடைகிறது.

வந்தே பாரத்
வந்தே பாரத்

சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த செமி ஹைய் ஸ்பீடு ரயில்கள் சென்னை - கோவை நகரங்களுக்கு இடையேயான 495 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடக்கும். வந்தே பாரத் ரயில் கோவையில் துவங்கி திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகியவை நிறுத்தப்படுகின்றன. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12:10 மணிக்கு சென்னை வந்தடையும்.

டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா (ஜே&கே) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த வந்தே பாரத் ரயில் புது டெல்லி ஸ்டேஷன் மற்றும் மாதா வைஷ்ணோ தேவியின் பேஸ் கேம்ப் கட்ரா இடையே இயங்கி வருகிறது. இது சுமார் 8 மணி நேர பயணமாகும், சென்னை - கோவை மத்தியில் பயண நேரம் 6 மணிநேரம்.

டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா (ஜே&கே) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த வந்தே பாரத் ரயில் புது டெல்லி ஸ்டேஷன் மற்றும் மாதா வைஷ்ணோ தேவியின் பேஸ் கேம்ப் கட்ரா இடையே இயங்கி வருகிறது. இது சுமார் 8 மணி நேர பயணமாகும், சென்னை - கோவை மத்தியில் பயண நேரம் 6 மணிநேரம்.

புது டெல்லி - அம்ப் ஆண்டௌரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து காலை 05:50 மணிக்கு புறப்பட்டு 11:05 மணிக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அம்ப் அனடௌராவை சென்றடைகிறது.

காந்திநகர் - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 30, 2022 அன்று தொடங்கப்பட்ட இந்த ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு 522 கி.மீ தூரத்தை கடந்து காந்திநகர் கேப்பிடல் ரயில் நிலையத்தை மதியம் 12:25 மணிக்கு சென்றடைகிறது.

நாக்பூர் - பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 02:05 மணிக்கு புறப்பட்டு இரவு 07:35 மணிக்கு பிலாஸ்பூரை சென்றடைகிறது.

ஹவுரா - புதிய ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: டிசம்பர் 30, 2022 அன்று மேற்கு வங்கத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து காலை 05:55 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:25 மணிக்கு நியூ ஜல்பைகுரியை அடைகிறது. சுமார் 454 கிமீ தூரத்தை 7 மணி 30 நிமிடங்களில் கடந்து செல்கிறது.

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் தெலுங்கானாவின் செகந்திராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் செகந்திராபாத் ரயில்வே நிலையத்தில் இருந்து பிற்பகல் 3:00 மணிக்கு புறப்பட்டு விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை இரவு 11:30 மணிக்கு வந்தடையும்.

மும்பை - சோலாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: மும்பை மற்றும் சோலாப்பூர் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (சிஎஸ்டி) மாலை 4:05 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு சோலாப்பூரை அடைந்து 6 மணி நேரம் 35 நிமிட நீண்ட பயணத்தைக் கொண்டுள்ளது.

மும்பை - ஷீரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த வந்தே பாரத் ரயில் மும்பை சிஎஸ்டி நிலையத்திற்கும் சாய்நகர் ஷீரடிக்கும் இடையே ஐந்து மணி நேரம் 20 நிமிடங்களில் தூரத்தை கடக்கிறது.

ஹஸ்ரத் நிஜாமுதீன் - ராணி கம்லாபதி நிலையம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: 2022 ஏப்ரல் 1 முதல் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் இருந்து நாட்டின் 11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: ஐடி சிட்டியான ஹைதராபாத்தில் இருந்து திருப்பதியுடன் இணைக்கிறது இந்த ரயில். இது தெலுங்கானாவில் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com