உலகம் முழுவதும் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்க ஆயத்தமாகி வருகிறார்கள் இந்தியாவில் புத்தாண்டு இன்று இரவு 12.00 தொடங்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் . உலகில் எல்லா பகுதிகளிலும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் மொத்தம் 25 மணி நேரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் உலகில் வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு நேரங்களில் புத்தாண்டை கொண்டாட தொடங்கும்.
பசிபிக் பெருங்கடலின் நடுவில் வடக்கிலிருந்து தெற்கே 180வது மெரிடியனைப் பின் தொடர்கிறது. கிரீன்விச் அதாவது பிரிட்டன் நாட்டின் கிரீன்விச் என்ற பகுதியை மையமாக வைத்து உலகம் முழுவதும் நேரம் கணிக்கப்படுகிறது. அதனால் தான் இந்த நேர மாறுபாடுகள் .
முதன் முதலில் புத்தாண்டினை வரவேற்கும் நாடு எது தெரியுமா ?
பசிபிக் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் தான் புத்தாண்டை முதன் முதலில் கொண்டாட உள்ளன. கிரிமதி தீவு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள 10 மக்கள் வசிக்காத தீவுகளில் தான் புத்தாண்டு முதலில் வரும்.
அதாவது கிரிப்டி என்ற நாடு மொத்தம் 33 தீவுகளை உள்ளடக்கியது. அந்த நாட்டில் உள்ள கிரிமதி தீவு தான் முதலில் புத்தாண்டைக் கொண்டாட உள்ளது. அதன் பிறகு டோங்கா, உள்ளிட்ட தீவுகளில் புத்தாண்டு வரும். இங்கு இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கே புத்தாண்டு தொடங்கிவிடும். அதைத் தொடர்ந்து ஓசியானியா நாடுகளில் புத்தாண்டுகள் வரும். அப்படியே மெல்ல ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் புத்தாண்டுகள் வரும்.
அதன் பிறகு அமெரிக்காவில் புத்தாண்டு வரும். புத்தாண்டை கடைசியாக வரவேற்கும் பகுதி என்று பார்த்தால் அது தென் பசிபிக் பகுதியில் உள்ள நியு மற்றும் அமெரிக்கன் சமோவா தீவுகள் ஆகும். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தான் புத்தாண்டை கடைசியாக வரவேற்பார்கள். இதற்குப் பிறகு இருக்கும் பேக்கர் தீவு மற்றும் ஹவ்லேண்ட் தீவில் இதன் பிறகு தான் புத்தாண்டு வகும் என்றாலும் கூட இந்த இரண்டிலும் மக்கள் யாரும் இல்லை.
அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி மாலை 4.30 மணிக்குத் தான் இங்குப் புத்தாண்டு வரும். மொத்தத்தில் பார்த்தால் பூமியில் வசிக்கும் அனைத்து இடங்களும் ஒரு நாளைக் கடக்க 25 மணி நேரம் ஆகும். எனவே, இந்த புத்தாண்டு இன்று மாலை தொடங்கி 25 மணி நேரம் உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது.