ஆஸ்கார் விழாவில் தொகுப்பாளராகப் போகும் பிரபல இந்திய நடிகை யார் தெரியுமா?

ஆஸ்கார் விழாவில் தொகுப்பாளராகப் போகும்  பிரபல இந்திய நடிகை யார் தெரியுமா?
Published on

ஆஸ்கார் விழாவில் தொகுப்பாளராகப் போகும் பிரபல இந்திய நடிகை தீபிகா படுகோனே. ஆஸ்கார் விருதுகளுக்கான தொகுப்பாளர்களில் தீபிகா படுகோனே பெயர் இடம் பெற்றுள்ளது. ஆஸ்கார் விருதுகள் 2023, 95வது அகாடமி விருதுகளில் தொகுப்பாளராக எமிலி பிளண்ட், டுவைன் ஜான்சன் ஆகியோருடன் இந்திய நடிகை தீபிகா படுகோனே இணைந்துள்ளார்.

95வது அகாடமி விருதுகள் மார்ச் 12ம் தேதி ,இந்தியாவில் மார்ச் 13 லாஸ் ஏஞ்சல்ஸ் டோலி தியேட்டரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விருது விழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். பலருக்கும் விருது வழங்கப்பட உ ள்ளது.

இந்நிலையில் 95வது ஆஸ்கார் விருதுகளுக்கான தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள்ளது. இந்த தொகுப்பாளர்கள் பட்டியலில் தீபிகா படுகோனே பெயர் இடம் பெற்றுள்ளதனால் அவர்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கும் 95 வது ஆஸ்கார் விருதுகள் மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும் மற்றும் மார்ச் 13 ஆம் தேதி காலை இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் நிறுவனம் 95-வது ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் பெயர் இடம் பெற்றுள்ளதை ரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com