உலக வங்கியின் அடுத்த தலைவர் யார் தெரியுமா?

உலக வங்கியின் அடுத்த தலைவர் யார் தெரியுமா?
Published on

உலக வங்கியின் தலைவராக இந்திய அமெரிக்கரான ஒருவரை அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வியாழக்கிழமை தெரிவித்து உள்ளது பலரையும் பெரும் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளர். இதனை அடுத்து இந்த முக்கியமான பதவியில் யாரை நியமிப்பது என்பதில் பெரும் குழப்பம் நிலவிவருகிறது. சர்வதேச பொருளாதாரம் கடும் ரெசிஷனை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் இந்த இக்கட்டான வேளையில் உலகி வங்கியின் புதிய தலைவர் மிகவும் திறமையானவராகவும், அனைத்து துறையிலும் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டியது அத்தியாவசியமாக உள்ளது.

இந்த நிலையில் அஜய் பங்காவை கை காட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். யார் இந்த அஜய் பங்கா தெரியுமா? உலகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாபெரும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தான் இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா. இவரை தான் உலக வங்கியை வழி நடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வியாழக்கிழமை தெரிவித்து உள்ளார். இதேபோல் அஜய் பங்கா இந்தியாவில் பிறந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அது மட்டும் அல்லாமல் பராக் ஓபாமா இவரை அதிபர் ஆலோசனை குழுவில் நியமித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன்
ஜோ பைடன்

உலக வங்கி தனது புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள், நிதி அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள் எனப் பல தரப்பினர் 'இவரை; நியமிக்கலாம் எனப் பரிந்துரைகளை அளிக்கத் துவங்கியுள்ளது. உலக வங்கி நிர்வாகம் மார்ச் 29 ஆம் தேதி வரையில் வேட்பாளர் நியமனங்களை ஏற்கும். ஆனால் உலக வங்கி பெண் வேட்பாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியரை நியமிப்பது தான் வழக்கம். ஆனால் இந்த முறை இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா-வை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com