சிம்பு போல அஜித்தால் ஏன் உடல் எடையைக் குறைக்க முடியாது தெரியுமா?

சிம்பு போல அஜித்தால் ஏன் உடல் எடையைக் குறைக்க முடியாது தெரியுமா?

சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், மம்முட்டி, கமலஹாசன், சல்மான்கான் உள்ளிட்ட பலரும் இந்த வயதிலும் ஃபிட்னஸ் விஷயத்தில் பக்கவாக இருக்கிறார்கள். ஆனால் இன்று தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் அஜித் ஏன் தனது ஃபிட்னஸ் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். 

திருப்பதி, பரமசிவன் போன்ற படங்களில் மிகவும் ஒல்லியாக வந்த நடிகர் அஜித்குமார் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பிட்னஸ் விஷயத்தில் கவனம் செலுத்தாதது போல்தான் தெரிகிறது. இருப்பினும் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவரது முகத்தை பார்த்தால் போதும் அவருடைய ஃபேஸ் வேல்யூவுக்கு நிகர் எதுவுமே இல்லை என கொண்டாடி வருகின்றனர். 

ஒரு காலத்தில் காதல் மன்னன், ஆணழகன் என அஜித்தை இந்த தமிழ் சினிமா கொண்டாடி வந்த நிலையில், அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பலரும் அவரை விமர்சிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. இவ்வாறு அஜித்தை பிறர் உடல் தோற்றத்தை வைத்து விமர்சிப்பது அவரின் ரசிகர்களுக்கு உச்சகட்ட கோபத்தையே ஏற்படுத்துகிறது. மேலும் இவருடைய சில ரசிகர்களே, இவர் ஏன் ஃபிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பைக் டூர், உலக சுற்றுலா என நேரத்தை செலவிடுகிறார் என கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

இதேபோல்தான், சிம்புவும் தனது உடல் எடை அதிகரித்ததால் பிறரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் பல மாதங்கள் அதற்காக கடுமையாக உழைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு ஒல்லியாக மாறி திரை உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பத்து தலை படத்திற்காக உடன் பருமனை சற்று அதிகரித்து, தனது அடுத்த படத்திற்காக மூன்றே மாதங்களில் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஸ்லிம்மாகவும் மாறியுள்ளார். 

அஜித்தால் சிம்புவைப் போல் ஒல்லியாக மாற முடியாதா?

டிகர் அஜித் தனது உடல் எடையைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் போனதற்கு முதல் காரணமாக இருப்பது, ஒரு விபத்தில் அவருடைய முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம்தான். அதனால் அவருக்கு  அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு, அதற்காக மருந்துகளை எடுத்துக் கொண்டு வருகிறார். எனவே அவரால் அதிகப்படியாக ஒர்க் அவுட் செய்ய முடியாது என்பதால் தான் உடல் எடையைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. 

இருப்பினும், அஜித் அப்படி ஒன்றும் சொல்லுமளவுக்கு மிகவும் மோசமான உடல் தகுதியுடன் இல்லை என அவரது ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் கூறி வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com