அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன் பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜனவரி. 13-ம் தேதி பயணத்திற்கு இன்று முன் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
வேலை காரணமாக சென்னையில் தங்கியுள்ள பலரும் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு செல்லவே விரும்புவர். பொதுவாகவே விடுமுறை நாட்களிலும், பண்டிகை தினங்களிலும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். அதனை தவிர்க்கவே ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட்கள் முன் பதிவு செய்ய தொடங்கி விடுவது வழக்கமாகி விட்டது. 2023ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட உள்ளது.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளுக்கான முன் பதிவு தற்போது தொடங்கி உள்ளது. ஜனவரி 13-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முன்பதிவு செய்ய வேண்டும். tnstc.com என்ற இணைய தளத்தில் முன் பதிவு செய்து கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன் பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் ஜனவரி 12-ம் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன் பதிவு ஆரம்பமானது. பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் நேற்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் முன் பதிவு செய்யலாம்.