Covid தொற்றை துல்லியமாகக் கண்டறியும் மோப்ப நாய்கள்!

dogs accurately detect Covid infection.
dogs accurately detect Covid infection.
Published on

நாய்கள் என்றுமே மனிதர்களாகிய நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறியதில்லை. அவற்றின் மோப்பசக்தி, செயல்திறன், விசுவாசம் போன்றவை எப்போதும் மனிதர்களுக்கு சிறந்த பாடங்களாகவே இருக்கிறது. உலகெங்கிலும் நாய்கள் வீட்டில் செல்லப்பிராணிகளாக இருப்பது மட்டுமின்றி, ராணுவம் மற்றும் காவல் துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்தான் பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் கோவிட் தொற்றை, ஆய்வு பரிசோதனைகளை விட துல்லியமாகக் கண்டறிவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது covid நோய் தொற்றுக்களை கண்டறிவதற்காக, தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுத்து வழக்கமாக செய்யும் பரிசோதனைகளை விட, நாய்களின் துல்லியமான மோப்ப சக்தியால் கோவிட் நோய்த்தொற்றை மேலும் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம் என சொல்லப் படுகிறது. 

அமெரிக்காவில் உள்ள சேண்டா பார்ப்பாரா பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் டாமி கூறுகையில், 

"நாய்களால் மனிதர்களை விட வாசனைகளை நுணுக்கமாக அறிய முடியும். வாசனையை உணர்வதற்காகவே அவற்றின் மூலையில் மூன்றில் ஒரு பகுதி தீவிரமாக செயல்படுகிறது. இதனால் கோவிட் நோய்த்தொற்றால் ஏற்படும் வாசனைகளைக் கூட நாய்களால் துல்லியமாகக் கண்டறிய முடியும். ஒரு மிகப்பெரிய ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் வீசும் ஒரு துளி துர்நாற்றத்தைக் கூட அவற்றால் துல்லியமாகக் கண்டறிய முடியும். எனவே சில சமயங்களில் வழக்கமான சோதனையில் கண்டுபிடிக்க முடியாத கோவிட் தொற்றை, நாய்களால் கண்டுபிடிக்க முடிந்ததை நாங்கள் அறிந்தோம். 

சில நேரங்களில் நாய் அந்த குறிப்பிட்ட நபரை விரைவாக மோப்பம் பிடித்து கோவிட் இருப்பது குறித்த உண்மையை செய்கை மூலமாக உணர்த்தியது. இதனால் கோவிட் நோய்த்தொற்று பரிசோதனைக்கான செலவுகளை குறைப்பதோடு மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார். 

இருப்பினும் இதில் சராசரி பரிசோதனைகளை விட சில சவால்கள் உள்ளது. ஆனால் ஏற்கனவே நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை கண்டறிவதில் நாய்களின் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட நிலையில், இதுவும் நிச்சயம் சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com