அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அதிரடி கைது.. எதற்கு தெரியுமா?

ட்ரம்ப்
ட்ரம்ப்
Published on

தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டு சில நிமிடங்களிலேயே விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ட்ரம்ப், பல செயல்களை செய்து பிரபலமடைந்தார். உலக அளவில் பிரபலமான ட்ரம்ப் குறித்து எப்போது தலைப்பு செய்திகள் வருவது வழக்கம். தற்போது கைது செய்யப்பட்டு மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார்.

2 லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் போலீசார் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டின் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று அதிபர் ஆனார். அப்போதே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனது கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தனது தனி விமானத்தில் ஏறும் போது பேட்டியளித்த ட்ரம்ப், "வழக்குத் தொடுப்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com