#BIG BREAKING : ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தம் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு…..!

TRUMP
TRUMPIMAGE SOURCE:DYNAMITE NEWS
Updated on

ஈரான் மீதான போரை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிரூத் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போருக்கு தீர்வு காண்பது குறித்து, மிகச் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன என்பதைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வாரம் முழுவதும் தொடரவிருக்கும், ஆழமான, மற்றும் ஆக்கபூர்வமான இந்தப் பேச்சுவார்த்தைகளின் போக்கு மற்றும் தன்மையின் அடிப்படையில், ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு நான் போர் (பாதுகாப்பு) துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்; இந்த ஒத்திவைப்பானது, தற்போது நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றியின் அடிப்படையில் அமையும்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அடுத்த 48 மணி நேரத்திற்குள் கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கபடவில்லையென்றால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com